ராஜாராணி படத்தின் ஹிட்டுக்கு பிறகு விஜய்க்காக இரண்டு வருடங்களுக்கு மேல் காத்திருந்தார் அட்லி. பின்னர் தெறி படத்தை இயக்கினார். முதல் படம் எப்படி மெளனராகம் பாணியில் இருப்பதாக விமர்சிக்கப்பட்டதோ அதேபோல் தெறி படமும் சத்ரியன் போன்று இருப்பதாக கூறப்பட்டது. என்றாலும், இந்த விமர்சனங்கள் எதுவும் படத்தின் வெற்றியை பாதிக்கவில்லை. ஆக, இரண்டு படங்களையுமே ஹிட்டாக கொடுத்து வெற்றிப்பட இயக்குனராகி விட்ட அட்லி, அடுத்தபடியாகவும் மெகா படம்தான் இயக்க வேண்டும் என்பதற்காக பைரவா படம் முடிகிற வரை விஜய்க்காக காத்திருந்து விஜய்யின் அடுத்த படத்தை தேனாண்டாள் பிலிம்சுக்காக இயக்கும் வேலைகளில் தற்போது இறங்கி விட்டார்.மேலும், தற்போது விஜய்யும் பைரவா படத்தில் அவர் சம்பந்தப்பட்ட காட்சிகளில நடித்துக்கொடுத்து விட்டதால், அட்லி இயக்கும் படத்திற்காக தன்னை தயார்படுத்திக்கொண்டிருக்கிறார். இந்த நிலையில், அந்த படத்தில் நடிக்க நயன்தாராவிடம் பேசியுள்ள அட்லி, இன்னொரு நாயகிக்காக சில நடிகைகளிடம் பேசி வருகிறார். அதோடு, அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 5-ந்தேதிக்கு பிறகு படப்பிடிப்புக்கு செல்லவும் ஆலோசித்துக்கொண்டிருக்கிறார் அட்லி.


Advertisements