ஸாகிரெப்: குரோஷியா – அர்ஜென்டினா அணிகள் மோதும் டேவிஸ் கோப்பை டென்னிஸ் இறுதிப் போட்டியில், ஒற்றையர் ஆட்டங்களின் முடிவில் இரு அணிகளும் 1-1 என சமநிலை வகிக்கின்றன. குரோஷியா தலைநகர் ஸாகிரெபில் நடைபெறும் பைனலில், முதலாவது ஒற்றையர் ஆட்டத்தில் குடோஷியாவின் மரின் சிலிச் 6-3, 7-5, 3-6, 1-6, 6-2 என்ற செட் கணக்கில் மூன்றரை மணி நேரம் போராடி அர்ஜென்டினாவின் பெடரிகோ டெல்போனிசை வீழ்த்தினார். 2வது ஒற்றையர் ஆட்டத்தில் அர்ஜென்டினாவின் ஜுவன் மார்டின் டெல்போட்ரோ 6-4, 6-7 (6-8), 6-3, 7-5 என்ற செட் கணக்கில் வென்று 1-1 என சமநிலை ஏற்படுத்தினார்.அடுத்து இரட்டையர் ஆட்டத்தில் குரோஷியாவின் மரின் சிலிச் – இவான் டோடிக் ஜோடி அர்ஜென்டினாவின் டெல் போட்ரோ – லியோனார்டோ மேயர் ஜோடியுடன் மோதுகிறது.

Advertisements