கோவ்லுான்: ஹாங்காங் ஓபன் பாட்மின்டன் தொடரின் பைனலில், சிந்து சீன வீராங்கனையிடம் தோல்வியடைந்தார்.ஹாங்காங் பாட்மின்டன்ஹாங்காங்கில் உள்ள கோவ்லுான் நகரில், ஹாங்காங் ஓபன் சூப்பர் சீரிஸ் பாட்மின்டன் தொடர் நடக்கிறது. பெண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில், உலக தரவரிசையில் 9வது இடத்தில் உள்ள இந்தியாவின் சிந்து, 26வது இடத்தில் உள்ள ஹாங்காங்கின் செங் நகன்யியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.தோல்வி:பைனலில் சிந்து, சீன தைபே வீராங்கனை டாய் டிசூ யிங் மோதினார். இதில், சிந்து 15- 21, 17 – 21 என்ற புள்ளிக்கணக்கில் கடுமையாக போராடி தோல்வியடைந்தார்.

Advertisements